அதனாலதான் அப்படி செஞ்சிட்டாங்க…. பெண் தனது குழந்தையுடன் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

கணவன் மது அருந்திவிட்டு தகராறு செய்ததால் பெண் மன உளைச்சலுக்கு ஆளாகி தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஓச்சேரி பகுதியில் தயாளன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கீர்த்தி என்ற மகனும், ஹரிதா என்ற மகளும் உள்ளனர். மேலும் தயாளன் அடிக்கடி மது அருந்தி விட்டு தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் தயாளன் வழக்கம்போல் மது அருந்திவிட்டு தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் தயாளன் நள்ளிரவு தனது தாயாரான தாயம்மாள் வீட்டின் திண்ணையில் படுத்து தூங்கியுள்ளார். இந்த பிரச்சினையால் மனமுடைந்த வெண்ணிலா தனது மகன் கீர்த்தியை நாற்காலியில் அமரவைத்து வயரால் கட்டிப் போட்டுள்ளார்.

இதனையடுத்து அவரது மகள் ஹரிதாவை சேலையால் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு கொன்று விட்டார். அதன்பின் அதே சேலையால் வெண்ணிலாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து நாற்காலியில் அமர வைக்கப்பட்ட அவரது மகன் கீர்த்தி வயரை அறுத்துக்கொண்டு வெளியில் சென்று தனது தாயாரை தேடிப் பார்த்த போது அங்கு அவர் இல்லாததால் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தான். அப்போது வெண்ணிலாவும் ஹரிதாவும் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து கீர்த்தி அதிர்ச்சியடைந்துள்ளான். இதனையடுத்து கீர்த்தி அழுதுகொண்டே அருகில் உள்ள தனது அத்தை வீட்டுக்கு சென்று அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி தாயாரும் தங்கையும் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை தெரிவித்துள்ளான்.

அதன்பின் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தயாளன் வீட்டின் பின்புறம் சென்று தூக்கில் தொங்கிய வெண்ணிலாவையும் ஹரிதாவையும் பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து அக்கம்பகத்தினர் அவளூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தாய் மற்றும் மகளின் சடலத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெண்ணிலாவின் அண்ணனான கலைவாணன் அவளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *