வேன் மோதி 10 பேர் உயிரிழந்த வழக்கு… ” நாளைய தீர்ப்பு Youtube-ல் ஒளிபரப்பு”… குற்றவாளிக்கு என்ன தண்டனை…?

கனடாவில் 2018ஆம் ஆண்டு வேன் மோதி 10 பேர் உயிரிழந்த வழக்கில் நாளை வழங்கப்படும் தீர்ப்பு Youtube-ல் வெளியாக உள்ளது. 

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கனடாவிலுள்ள ரொறொன்ரோவில் பாதசாரிகளின் கூட்டத்திற்குள் வேன் ஒன்று புகுந்தது. இந்த கோர சம்பவத்தில் இலங்கை பெண் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர். இதனால் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற Alek  Minassian என்பவரை கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றங்களின்  கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர்  கைது செய்தனர்.  இந்நிலையில் Alek  Minassian  தன் மீது எந்த தவறும் இல்லை என்று கூறி குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தார்.

மேலும் தனக்கு மனநிலை பிரச்சனைகள் இருப்பதால் நான் எந்த குற்றங்களுக்கும் பொறுப்பேற்க மாட்டேன் என்று கூறி வாதாடினார். இந்நிலையில் 2 வருடங்களுக்கு மேல் நடந்து வந்த வழக்கின் தீர்ப்பு நாளை Youtube-ல் வெளியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் குறிப்பிட்ட  சில பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *