கம்மியான பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன்கள் வாங்க ஆசையா?…. இதோ உங்களுக்கான சூப்பர் தகவல்….!!!!

ஆஃபரில் Pixel 7a

அண்மையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மிட்-ரேஞ்ச் 5ஜி மொபைலான Pixel 7a, பேங்க் கார்ட் சலுகை உடன் தள்ளுபடி விலையில் கிடைக்கும். இந்த மொபைலின் அசல் விலையானது ரூ.43,999. உங்களிடம் HDFC பேங்க் கார்டு இருப்பின், ரூ.4,000 தள்ளுபடி உடன் Pixel 7a மொபைலை பிளிப்கார்டு வழியாக ரூ.39,999-க்கு வாங்கலாம். சிறந்த டிஸ்ப்ளே, கேமரா, பிரீமியம் டிசைன் மற்றும் ஒட்டுமொத்த சிறந்த செயல்திறன் போன்றவற்றை நியாயமான விலையில் பெற விரும்புவோருக்கு இது ஒரு மொபைல். இந்த மொபைலானது வயர்லெஸ் சார்ஜிங் டெக்னலாஜி மற்றும் IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட் ரேட்டிங்கிற்கான சப்போர்ட்டையும் கொண்டு உள்ளது. இதில் Tensor G2 SoC சிப்செட் மற்றும் 4,300 mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையில் ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் கிடைக்காது.

OnePlus 11R

பிளிப்கார்டில் ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போன் ரூபாய்.39,722-க்கு தள்ளுபடியில் கிடைக்கும். அதோடு HDFC வங்கி கிரெடிட்கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு ரூ.1,250 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இவ்வங்கி சலுகையை பயன்படுத்தினால் இந்த மொபைலை ரூ.38,472-க்கு வாங்கிக்கொள்ளலாம். பெரிய பேட்டரி, சிறந்த செயல் திறன் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டை விரும்பும் நபர்கள் Pixel 7a மொபைலுக்கு பதில் இந்த ஒன்பிளஸ் 11Rஐ வாங்கலாம். இந்த மொபைல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 சிப்செட், 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 5,000 mAh பேட்டரியை கொண்டு உள்ளது. எனினும் Pixel 7a அளவிற்கு இந்த மொபைலில் கேமரா சிறப்பாக இல்லை. இந்த மொபைல் உடன் ஒன்பிளஸ் ஒரு சார்ஜரையும் கொடுக்கிறது.