விறுவிறுப்பாக நடைபெறும் கமலின் ‘விக்ரம்’ படப்பிடிப்பு… வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்…!!!

கமலின் ‘விக்ரம்’ பட சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம்’ என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி , காளிதாஸ் ஜெயராம், பகத் பாசில் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் விக்ரம் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ,நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *