நேருக்கு நேர் சந்திக்கும் கமல், விஜய்… நடக்கவுள்ள சம்பவத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்..!!!

தற்போது விஜயை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வரும் லோகேஷ் எல் சி யு என்ற கான்செப்டை வைத்து அனைவரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறார். இதை தான் தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் லியோ திரைப்படத்தில் கமல் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கிறது.

அப்படியே இருந்தாலும் விஜயுடன் அவருக்கான காட்சிகள் எப்படி இருக்கும் என்ற இந்த விவாதம் தான் தற்போது காரசாரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் கமலின் காட்சி இறுதியில் தான் வரும் என்றும் விஜய்யுடன் அவர் ஒரே நேர்கோட்டில் பயணிப்பார் என்றும் கூறப்படுகிறது. இது நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மீறியதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply