ராதாரவியை கட்சியிலிருந்து நீக்கிய திமுகவிற்கு கமல் நன்றி தெரிவித்தார்..!!!

நயன்தாராவை சர்சையாக பேசிய ராதாரவியை கட்சியிலிருந்து நீக்கியதற்கு  திமுகவிற்கு பாராட்டுக்கள் தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.

கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி , ‘ இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவரும் , பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவரும் நடிக்கலாம் ‘ என்று சர்ச்சையாக பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு இயக்குனர்  விக்னேஷ் சிவன் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். ராதாரவியின் இந்த பேச்சுக்கு பல கண்டனம் எழுந்ததையடுத்து  நடிகர் ராதாரவியின் மீது திமுக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் திமுக தலைவர் முக.ஸ்டாலினும் ராதாரவியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

இது குறித்து திமுக தலைவர்முக.ஸ்டாலின்  பதிவிட்டுள்ள கருத்தில் , பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராதாரவியின் கருத்துக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் க்கான பட முடிவு

இதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தாபானர்ஜியை சந்திக்க கொல்கத்தா செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த கமல்ஹாசன் பத்திரிகையாளரிடம்  கூறுகையில், நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பது அனைத்து நடிகர்களின் கடமையாகும் . ஆனால் ராதாரவி நயன்தாராவை பற்றி பேசியது எனக்கு வருத்தத்தை தந்தது. அவரை கேட்க வேண்டியவர்கள் கேட்பார்கள். ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கியதற்கு தி.மு.க.விற்கு பாராட்டுகள் என்று கமல் தெரிவித்தார்.