கமலின் அடுத்த படம் ரெடி… இயக்குனர் யார் தெரியுமா..?

நடிகர் கமலஹாசன் நடிப்பில் அனிருத் இசையில் என்னவென்று நினைத்தாய் என்ற படத்தை இயக்க உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டு உள்ளார். மாநகரம்,கைதி, மாஸ்டர் என இதுவரை மூன்று படங்களை மட்டுமே இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ் இப்போது தமிழ் சினிமாவில் மோஸ்ட் வாண்டட் இயக்குனர் ஆவார். இளையதளபதி விஜய் நடிப்பில், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் மாஸ்டர் படத்திற்கு மக்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்திற்கு பிறகு ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் கொரோனா பிரச்சனையால் ரஜினி அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளாத நிலையில் இந்த படம் இப்போதைக்கு சாத்தியமில்லை எனவும், அதற்கு முன்னர் கமலை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தான் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் இசையில் என்னவென்று நினைத்தாய் என்ற படத்தை இயக்க உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *