”ஊளையிடும் கமல் , ஸ்டாலின்” வெளுத்து வாங்கும் சுப்ரமணியசாமி…!!

இந்தி திணிப்பு என்று கமலும் , ஸ்டாலினும் ஊளையிட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் என்று பாஜகவின்  சுப்ரமணியசாமி விமர்சித்துள்ளார்.

இந்தி தினத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் , பாஜக_வின் தலைவருமான அமித்ஷா டுவிட்டரில்  வெளியிட்ட கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது.  அதில் இந்தியாவில் பல மொழி இருக்கின்றது.ஆனாலும்  இந்தியாவின் அடையாளமாக , நாட்டை ஒருங்கிணைக்க ஒரு பொதுமொழி இருக்க வேண்டும்.நாட்டில் அதிக மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் நாட்டையும் , நாட்டு மக்களையும்  ஒன்றிணைக்க முடியும் என்று தெரிவித்தார். இதற்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலம் எதிர்ப்பு தெரிவித்தது.

இது குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்த கருத்தில் இரண்டாவது மொழிப் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். அதே போல நடிகர் கமல்ஹாசன் மத்திய அரசை கண்டித்து வீடியோ வெளியிட்டார். அதில் ஜல்லிக்கட்டை விட பெரிய போராட்டமாக மொழி போராட்டம் இருக்கும் என்று தெரிவித்தார். இவர்கள் இருவரின் கருத்தை விமர்சிக்கும் வகையில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியசாமி தனது ட்வீட்_டரில் வெளிட்ட கருத்தில், இந்தி திணிப்பு என்று கமலும்,  மு.க.ஸ்டாலினும் ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார்.மேலும் மொழியை தேர்வு செய்வது மாணவர்களின் முடிவு என்றும் தெரிவித்துள்ளார்.