வீட்டிலேயே பத்திரமாக இருங்க… 2 வாரத்தை சரியா பயன்படுத்துங்க… வீடியோ வெளியிட்ட கமல்!

வீட்டிலேயே இருங்கள், பத்திரமாக இருங்கள், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கமல் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் 3 பேர் உட்பட நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

தமிழக அரசு பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், மால்கள், திருமண மண்டபங்கள் ஆகியவை வரும் 31 ஆம் தேதி வரை மூடல் மற்றும் பொதுமக்கள் ஓன்று கூடுவதை தவிர்க்கவேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதனிடையே பிரபலங்கள் பலரும் கொரோனா குறித்த விழிப்புணர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல் ஹாசன் ட்விட்டரில் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இரண்டு வாரம் மிக முக்கியம் :

அதில் அவர் பேசியதாவது, என்னையா இது வீட்டுல இருக்கசொல்றீங்க, வருமானத்துக்கு என்ன பண்ண போறோம். மார்ச்-ஏப்ரல் பசங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணுமே, annual பீஸ் இருக்குன்னு ஏகப்பட்ட குழப்பங்கள். நாளைக்கு வருமானம் வருமா, கடைகள் எல்லாம் அடைச்சிருமே அப்படின்னு நிறைய கேள்விகள் இருந்தாலும்,  இது எல்லாமே செய்ய நீங்கள் உடல்நலத்துடன் இருப்பது ரொம்பவும் முக்கியம். அத மறந்துராதீங்க. அதனாலதான் இந்த ரெண்டு வாரம் மிக முக்கியமானது.

உங்களுக்கு தெரிஞ்சத குழந்தைக்கு சொல்லுங்க :

வேலை என்னத்துக்காவும், பசங்க படிப்பு என்னாகும், தொழில் என்னவாகுன்னு உங்களோட  நியாயமான பயங்களை கொஞ்சம் ஒதுக்கி வச்சி இந்த ரெண்டு வார்த்தை எப்படி சரியா பயன்படுத்துறோம் அப்படிங்கிறத பாருங்க. அதான் நமக்கு இருக்குற ஒரே வழி. வேலை தொழில் எப்போதுமே ஓடிட்டிருந்த ஆளா நீங்க இருந்துருந்தீங்கன்னா இந்த ரெண்டு வாரம் உங்க குடும்பத்துடன் நேரம் செலவிடலாம். இத்தனை வருஷம் நீங்க தெரிஞ்சிகிட்ட விஷயங்களை உங்க குழந்தை கிட்ட சொல்லுங்க, நீங்க படிக்கணும்னு நெனச்ச படிக்க முடியாம போன அந்த புக், பார்க்கணும்னு நெனச்ச மிஸ் பண்ணுன படம், கத்துக்கணும்னு நினைச்சி கத்துக்க முடியாம போன இசை. டைம் இல்லன்னு  நீங்க தள்ளிப் போட்ட அந்த போன் கால்ஸ் இதெல்லாம் இப்ப செய்யுங்க.

வாழ்க்கையில் ஒரு சின்ன இடைவெளி :

வீட்டில் இருக்கும் பெரியவர்களோடு நேரத்தை செலவிடுங்கள். குழந்தைகளை ஆன்லைன் கோர்ஸ்ல சேர்த்துவிடுங்க. புது விஷயங்களை அவங்க கத்துக்கிடட்டும்.  அவசர கால சமையல் எப்படிங்குறத இப்ப சொல்லி கொடுங்க அவங்களுக்கு. இயந்திரமா ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையில காலத்தின் கட்டாயத்தால் ஒரு சின்ன  இடைவெளி இப்போ கிடைச்சிருக்கு. அதை சரியாக பயன்படுத்துங்கள். வீட்டிலேயே இருங்கள், பத்திரமாக இருங்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்னு படிச்சது வழக்கத்திற்கு கொண்டு வரும் நேரம் இது வணக்கம் என்று கூறினார்.

இந்தோ அந்த  வீடியோ :

முன்னதாக அவர் வெளியிட்ட முதல் வீடியோவில் கூறியதாவது;

 

கொரோனா பரவாமல் தடுக்க ஒரே வழி :

கொரோனா வைரஸ் பாதிப்பு 4ஆவது 5ஆவது வாரத்துல பன் மடங்கு அதிகமாகிறது என்கிறத பல நாடுகளில் பார்த்துக்கிட்டிருக்கோம். எதுனால வைரஸ் தொற்று அறிகுறிகள் வெளியே தெரியாத போது பாதிக்கப்பட்ட சிலரும் பல இடங்களுக்கு போயிட்டு இருப்பாங்க. பாதிக்கப்பட்டது 5 பேர் அப்படின்னா அந்த 5 பேர் கிட்ட இருந்து 25 பேர் கிட்ட பரவும், அது இன்னும் நூறு பேருக்கு பரவாமல் தடுக்க ஒரே வழி தான் இருக்கு சோசியல் டிஸ்டன்ஸ்சிங் (விலகி இருத்தல்).

உடல்நிலையை பொறுத்து உயிருக்கு ஆபத்து :

அதீத விழிப்புணர்வு தேவைப்படுகின்ற 4ஆவது வாரத்துல தமிழ்நாடு இப்போம் இருக்கு. கூட்டம் கூடுகிற இடங்களுக்கு போவதை தவிர்த்து விடுங்கள். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளிய வாங்க நான் இப்ப வெளியே வந்திருக்கிறது இந்த அறிக்கையை  உங்களுக்கு சொல்வதற்காகத்தான். இப்படியெல்லாம் செய்வதன் மூலமாக வைரஸ் உங்களுக்கு பரவாமலும்,  உங்க கிட்ட இருந்துஉங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பரவாமலும்  தடுக்கலாம். கொரோனா தொற்று இருந்தாலே உயிருக்கு ஆபத்து அப்படிங்கிறது கிடையாதுங்க. ஆனால் வெகு சிலருக்கு அவங்க  உடல்நிலையைப் பொருத்து அது ஆபத்தாக மாறலாம்.

குடும்பத்தோட நேரத்தை செலவிடுங்கள் :

அதனால்தான் எல்லோரிடமும் இருந்து விலகி இருத்தல் அவசியமாகும். வீட்டில் இருங்க.. குடும்பத்தோட நேரத்தை செலவிடுங்கள். மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட செல்போனில் தினமும் பேசுங்க. ஆனா வாங்க எல்லாரும் மீட் பண்ணலாம் அப்படின்னு கூப்பிட்டா தவிர்த்திருங்க ப்ளீஸ். அவங்களால நமக்கும் நம்மளால அவங்களுக்கோ எதுவும் பாதிப்பு ஏற்படாமல் பொறுப்பாக இருங்கள். வந்தால் செய்ய வேண்டியதை வரும் முன்னாடி செய்வோம். விலகி இருங்கள்.. பாதுகாப்பாக இருங்கள். நமக்கு எதுவும் வராது என்று கண்மூடித்தனமான நம்பிக்கையினாலும் அசட்டு தைரியத்தாலும் இந்த நோய் பரவுவதற்கு நாம் காரணமாக இருந்துவிடக்கூடாது முன்னெச்சரிக்கை தான் முக்கியமான விஷயம் மறந்துவிடாதீர்கள் வணக்கம் என்று கூறியுள்ளார்.