ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்ஹாசன்…. வைரலாகும் வீடியோ பதிவு…. நீங்களே பாருங்க….!!!

சர்ப்ரைஸாக பின்னாலிருந்து கமல்ஹாசன் ரசிகர்கள் முன் தோன்றினார்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”விக்ரம்”.

ஜூன் 3ஆம் தேதி ரிலீஸாகும் இந்த படத்துக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திலிருந்து ”பத்தல பத்தல” பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து, இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ரசிகர்கள் சிலர் கமல்ஹாசன் குறித்தும் அவருடைய படங்கள் குறித்தும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது திடீரென சர்ப்ரைஸாக பின்னாலிருந்து கமல்ஹாசன் ரசிகர்கள் முன் தோன்றினார். இதைப்பார்த்த ரசிகர்கள் உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் விட்டுக் கலங்கியுள்ளனர். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *