அரசு பள்ளிகளுக்கு உதவி செய்யுங்க… கல்வி தான் நம்மை காப்பாற்றும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வை 50,674 மாணவர்கள் எழுதாத நிலையில், மாணவர்கள் ஆப்சென்ட் விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் மறுதேர்வு எழுதலாம் என தெரிவித்தார்.

இந்நிலையில் தாங்கள் படித்த அரசு பள்ளிகளுக்கு உதவி செய்ய பொதுமக்கள் முன் வரவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து வீடியோ வெளியிட்ட அவர், கல்விதான் நம்மை காப்பாற்றும். வாழ்க்கையின் அடுத்தடுத்த உயரத்துக்கு செல்ல நாம் பெற்ற கல்வியே உதவி செய்கிறது. நீங்கள் படித்த பள்ளிக்கு உதவ ஆசைப்பட்டால் தலைமை ஆசிரியர்களை அணுகுங்கள் (அல்லது) நம்ம ஸ்கூல் பவுண்டேசன் வெப்சைட் வாயிலாகவும் உதவலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply