கல்விச்செல்வம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்…. இதுவே அண்ணாவின் விருப்பம்…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

சென்னையில்  அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் பிரிவில் சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில்  முதல்வர் மு .க .ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை வழங்கினார். அதன்பிறகு பேசிய அவர் , அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு பொறியியல் பிரிவில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இட ஒதுக்கீட்டின்  அடிப்படையில் மாணவர்களுக்கு கல்வி கட்டணம், விடுதிக் கட்டணம் மற்றும் கலந்தாய்வுக்கட்டணம் ஆகிய அனைத்து கட்டணங்களையும் தமிழக அரசே ஏற்று கொள்ளும். அந்த வகையில் இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் 11,000  அரசு பள்ளி மாணவர் பயன்பெறுவார்கள் .

அதுமட்டுமல்லாமல் கால்நடை ,சட்டம் மற்றும் வேளாண்மை ஆகிய பிரிவுகளிலும் 300 மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்விச்செல்வம் என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது அண்ணாவின் விருப்பமாகும். அதனால் பள்ளி மாணவர்கள் அனைவரும்  உயர்கல்வியில்  நுழைய வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார்.