இன்ஸ்டாகிராம் வலைத்தளங்களில்…. கல்லூரி மாணவிக்கு நடந்த துயரம்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வலைத்தளங்களில் சித்தரித்த ஆபாச புகைப்படம் வெளிவந்ததால் மாணவி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மலையடி வெண்பாக்கம் கிராமத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு சுவேதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுவேதா சமூக வலைத்தளங்களில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். அதன்படி சுவேதா  வழக்கம்போல் செல்போன் மூலம் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து சுவேதாவின் படத்தை மர்ம நபர்கள் சிலர் மார்பிங் என்னும் நவீன தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுவேதா கடும் அவதிக்கு ஆளாகி வந்த நிலையில் வீட்டிற்கு தெரிந்து விடுமோ என்ற பயத்தில் 7- ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின்னர் நீண்ட நேரம் ஆகியும் தனது மகள் வராமல் இருப்பதனால் அவரது குடும்பத்தினர் சுவேதாவை தேடி அலைந்துள்ளனர்.

இதனைதொடர்ந்து அவரது குடும்பத்தினர் சந்தேகத்தின்படி வீட்டின் அருகில் இருக்கும் விவசாய கிணற்றில் சென்று பார்த்தபோது சுவேதா இறந்த நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுவேதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுவேதாவின் ஆபாச புகைப்படத்தை சித்தரித்து வெளியிட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *