ஆன்லைன் தேர்வில் வாங்கிய குறைந்த மதிப்பெண்… மனமுடைந்த CA மாணவர்… பரிதவிக்கும் பெற்றோர்….!!

திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகன் 19 வயதுடைய சரத் ராகவ் . இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் சிஏ படித்து வந்தார். கொரோன ஊரடங்கின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் இவர் ஆன்லைன் வகுப்பில் படித்துள்ளார். அப்போது ஆன்லைனில்  சரத்ராகவ் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. தேர்வில் அவர் குறைந்த அளவு மதிப்பெண் எடுத்ததால் அவர் மிகுந்த  மனவேதனையுடன் இருந்துள்ளார். இதனால் சரத் ராகவிற்கு அவருடைய பெற்றோர்  ஆறுதல் கூறியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மதியம் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய சரத் ராகவ் வீட்டின் படுக்கை அறைக்கு சென்று கதவை அடைத்து கொண்டார் . கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் பதறிய பெற்றோர்  கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு சரத் ராகவ் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சரத் ராகவை மீட்டு அங்கிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சரத் ராகவ் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.