கல்லீரல் பாதிக்கப்பட்ட தந்தை…. மகனின் சிறப்பான செயல்…. நடந்த நெகிழ்ச்சி சம்பவம்….!!

தந்தைக்கு கல்லீரல் தானம் செய்து அவரின் உயிரை மகன் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள அண்ணா 2-வது தெருவில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சந்தனமாரியம்மாள் என்ற மனைவியும், கமல் குல்சன் மற்றும் அஜய் குல்சன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் செல்வராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக குடும்பத்தாருக்கு தெரியவந்துள்ளது. இதற்காக மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்தும் பாதிப்பின் தாக்கமானது குறையாமல் தீவிரமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் கல்லீரல் செயலிழந்து விட்டதாகவும், அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் உயிரை காப்பாற்றி விடலாம் என தெரிவித்துள்ளார்.

அப்போது அவரின் மகனான அஜய் குல்சன் தனது தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய முன் வந்து, இது பற்றி தாயிடம் தெரிவித்த போது அவர் தானே தானம் செய்வதாக தெரிவித்துள்ளார். பின்னர் சந்தனமாரியம்மாளின் கல்லீரலிலை எடுத்து அவருடைய கணவருக்கு பொருத்துவதற்காக மருத்துவர்கள் பல பரிசோதனைகளை செய்துள்ளனர். ஆனால் அவருக்கு கல்லீரல் கொடுத்தால் இவர் கல்லீரல் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதனால் இருவரின் உயிருக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறி மருத்துவர்கள் இந்த முடிவை நிராகரித்துள்ளனர்.

அதற்குப் பிறகு அவரின் மகன், தந்தை செல்வராஜிக்கு தானம் செய்வதற்கு விருப்பம் இருப்பதாக மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை பரிசோதனை செய்ததில் கல்லீரல் தானம் செய்வதினால் எந்த வித பாதிப்பும் அவருக்கு ஏற்படாது எனத் தெரியவந்துள்ளது. பிறகு அறுவை சிகிச்சை மூலமாக அவரின் பாதியை செல்வராஜிக்கு பொருத்தி உள்ளனர். இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடிந்ததில் செல்வராஜ் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளார். மேலும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய தந்தை மற்றும் மகன் இருவரும் நலமாக இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *