” கல்லாப்பெட்டி சிங்காரம் சீப் மினிஸ்டர் ” பிஜேபியின் கொத்தடிமை OPS , EPS …… வெளுத்து வாங்கிய ராஜகண்ணப்பன்….!!

கல்லாப்பெட்டி சிங்காரம் சீப் மினிஸ்டர் என்றும் பிஜேபியின் கொத்தடிமையாக OPS_யும் , EPS_யும் செயல்படுவதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்   ராஜகண்ணப்பன் தெரிவித்தார் .

அதிமுக கட்சி சார்பில் போட்டியிட இடம் கிடைக்காத காரணத்தால் அதிருப்தியான  அதிமுக_வின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக_வில் இருந்து விலகியதற்கான காரணத்தை தெரிவித்தார்.

Image result for அமைச்சர் ராஜகண்ணப்பன்

அப்போது அவர் கூறுகையில் , திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் இந்திய நலனுக்காகவும் , தமிழகத்தின் தன்மானத்திற்கும் போராடுகின்ற இந்த நேரத்தில் , இந்த தேர்தலில் பிஜேபி யின் கொத்தடிமைகளாக இருக்கின்ற அஇஅதிமுக_வின்   ஓபிஎஸ் , இபிஎஸ்  தலைமையிலிருந்து செயல்பட முடியாத ஸ்டாலின் தலைமையில் இந்த தேர்தலில் நாங்கள் பணியாற்ற திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவை தெரிவித்துள்ளோம் .

Image result for அமைச்சர் ராஜகண்ணப்பன்

சிவகங்கை , விருதுநகர் , கன்னியாகுமரி , ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி இப்படி அனைத்து தென் மாவட்ட தொகுதியையும்  பிஜேபி_க்கு கொடுத்தால்  கொத்தடிமை என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது என்று விமர்சித்து முதல்வர் எட்டப்பாடியை கல்லாப்பெட்டி சிங்காரம் சீப் மினிஸ்டர்  என்று கிண்டல் செய்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்  அதிமுக_வில் இருப்பவர்கள்  தொண்டர்கள் யாரும் கிடையாது , சீட்டுகளும் , பணத்திற்க்காகவும்  தான் அந்த கட்சியில் உள்ளனர் .   ஒரு குடும்பத்திற்கு கட்சி செல்லக்கூடாது என்று தர்மயுத்தம் நடத்திய OPS  தனது மகனுக்கு சீட்டு வாங்க  தொகுதியை தாரை வார்த்தால் என்ன அர்த்தம் .

Image result for அமைச்சர் ராஜகண்ணப்பன்

நோட்டாவுக்கு கீழே ஓட்டு வாங்கும் கட்சி பிஜேபி . ஓபிஎஸ் அவர் மகனுக்கு சீட்டு வாங்குவதற்காக கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார் . அதிமுகவில் ஆளுமை உள்ள தலைவர்கள் கிடையாது . தலைவர்கள் முன்பே சேரை தூக்கிக்கொண்டு அடிக்கிறார்கள் . பிஜேபியின் கொத்தடிமைகளாக ஓபிஎஸ் இபிஎஸ் இருப்பதனால் திமுக கூட்டணியை ஆதரிக்கிறோம் . கன்னியாகுமரி முதல் கிருஷ்ணகிரி வரை திமுக_விற்கு ஆதரவாக  பிரசாரம் செய்வேன்  என்று ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.