வருவாய்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம்…. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து வருவாய் ஆய்வாளர்கள், நில அளவையர்கள் மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா தலைமை தாங்க, தாசில்தார் சரவணன், மண்டல துணை தாசில்தார் சேகர், தேர்தல் துணை தாசில்தார் பசுபதி, வட்ட சார் ஆய்வாளர் பால்தினகர், வட்ட வழங்கல் அலுவலர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் மக்களைத்தேடி மனுக்கள் பெறும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது, வருவாய் தீர்வாய கணக்குகள் பராமரிப்பு, பள்ளி சான்றுகளை தாமதமின்றி உடனுக்குடன் வழங்குவது,  மற்றும் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதில் சார் ஆய்வாளர் பிரபாகரன், வருவாய் ஆய்வாளர்கள் கல்யாணி, நிர்மலா, அன்பழகன் சங்கீதா, ருத்ரகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜா, வரதராஜன், கார்த்திகேயன் தீபா, பர்கத்துன்னிஷா, சண்முகப்பிரியா, ஜெயலக்ஷ்மி, பாரதி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.