பருத்தி சாகுபடி குறித்து பயிற்சி…. விளக்கம் அளித்த அதிகாரி….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே பழைய உச்சிமேடு என்ற கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடி முறைகள் பற்றி வயல்வெளி பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண்மை அலுவலர் வனிதா முன்னிலை வகித்த நிலையில், பருத்தி பயிரில் தீமை செய்யும் பூச்சிகளால் ஏற்படும் பாதிப்புகள், நோய் பாதிப்புகள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கமளித்தார்.

இதனை தொடர்ந்து விவசாயிகளை பருத்தி வயலுக்கு அழைத்துச் சென்று நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் குறித்தும், நுண்ணூட்ட சத்து பற்றாக்குறையால் பருத்தி பயிரில் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவைகள் பற்றி நேரடியாக செயல் விளக்கம் அளிக்கப்பட்டு, இயற்கை முறைகள் மூலம் பூச்சி கட்டுப்பாடு, இனக்கவர்ச்சி பொறி, விளக்குப்பொறி ஆகியவைகளின் செயல்பாடுகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது. அப்போது வட்டார தொழில்நுட்ப மேலாளர் சூரியா, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் ரவி, கலைவாணன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.