இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சூப்பர் வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…. அதிகாரி வெளியிட்ட தகவல்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்  ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, அம்மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான  சிறப்பு குறைதீர்க்கும் நாள் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தொழில் பொது மேலாளர், தாசில்தார்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் மனுக்களின் மீது தீர்வு அளிக்க உள்ளதால், கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

இதனையடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை, வங்கி கடன், உதவி உபகரணங்கள், பெட்ரோல் ஸ்கூட்டர்கள், பார்வையற்றவர்களுக்கு செல்போன், பேருந்து பயண சலுகை அட்டை மற்றும் இதர அரசு உதவிகள் தொடர்பான உதவிகள் கோரும் மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளதால், இவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.