காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அரசு மருத்துமனையில் தேசிய காசநோய் திட்டத்தின் கீழ் காசநோய் விழிப்புணர்வு பேரணி முதன்மை மருத்துவர் அலுவலர் ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் தனியார் நர்சிங் பயிற்சி மாணவிகள் பங்கேற்றனர். மேலும் இந்த நோய் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திய படி, முழக்கங்கள் எழுப்பியும், பொது மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு துண்டு நோட்டீஸ்களையும் வழங்கியும் இந்த பேரணியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து இந்த ஊர்வலமானது அரசு மருத்துவமனையில் இருந்து ஆரம்பமானது. பின்னர் பூட்டை மெயின் ரோடு, கல்லை மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் அரசு மருத்துவமனையை வந்தடைந்தனர். இதில் சுகாதார ஆய்வாளர் சரவணன், மாவட்ட காச நோய் ஒருங்கிணைப்பாளர் இளவரசன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் துரைராஜ், ஆய்வக பரிசோதகர்கள் மகேந்திரன், ரகு  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.