அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…. கண்டன முழக்கங்கள்…. முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை குறித்து எவ்வித அறிவிப்பும் செய்யப்படாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு தலைமை தாங்க, மாவட்டத் துணைத் தலைவர்கள் தயாபரன், ஜெகதீசன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் பழனிவேல், வட்டார செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஊராட்சி செயலாளர், சத்துணவு ஊழியர் சங்க வட்டார தலைவர், வட்டார செயலாளர் சரவணன், பொது சுகாதார மாவட்டத் தலைவர் , பணி மேற்பார்வையாளர், உதவியாளர் போன்ற  அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். மேலும் இவர்கள் தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களும் எழுப்பினர்.