அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி…. ஏராளமானோர் பங்கேற்பு….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயப்பாளையம் அருகே பால்ராம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பின் அவர் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் செயல்பாடு மற்றும் நோக்கம் பற்றி விளக்கமாக  எடுத்துரைத்தார். இதனை தொடர்ந்து மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் இதில் பள்ளி ஆசிரியர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற நிலையில், சிறப்பாக இந்நிகழ்வு நடைபெற்றது.