கழன்று ஓடிய சக்கரங்கள்…. தடுப்பு சுவரில் மோதிய லாரி…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சாலையின் மைய தடுப்பில் லாரி மோதியதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.

கடலூர் மாவட்டத்திலுள்ள விருதாச்சலத்தில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு  லாரி ஒன்று சென்னிமலை-காங்கேயம் வழியாக கேரளாவிற்கு சென்றுள்ளது. அந்த லாரியை விருத்தாசலத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அந்த லாரி நல்லிக்கவுண்டன் வலசு பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையின் மைய தடுப்பில் மோதியுள்ளது. இதனால் லாரியின் முன் சக்கரங்கள் இரண்டும் கலன்று ஓடியது. மேலும் லாரியின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்துள்ளது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுனர் எந்த காயமுமின்றி உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடர்பாடுகளை அகற்றி வாகனங்கள் செல்ல வழிவகை செய்துள்ளனர். பின்னர் லாரியை ஓரத்திற்கு கொண்டு செல்வதற்காக பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. அதன்மூலம் லாரியை அப்புறப்படுத்தி, சேதமடைந்த சாலையின் மைய தடுப்பு இடர்பாடுகளை அகற்றி வாகனப் போக்குவரத்தை சீர் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *