“ரகசிய நிச்சயதார்த்தம்” தொழிலதிபரை மணக்கும் காஜல்…? தெலுங்கு ஊடகம் வெளியிட்ட தகவல்…!!

நடிகை காஜலுக்கு ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் தொழிலதிபரை திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

நடிகை காஜல் அகர்வால் “பொம்மலாட்டம்” என்ற படத்தின் மூலம் 2008 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து பிரபலமாகி வருகிறார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள “பாரிஸ் பாரிஸ்” என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஓடிடியில் விரைவில் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து கமலஹாசனுடன் இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவரைப்பற்றி அவ்வபோது திருமண வதந்திகள் வந்தது.

பலமுறை இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர்கூட அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக கூறப்பட்டது. இது பற்றி வெளியான செய்திகள் உண்மை அல்ல என்று காஜல்அகர்வால், பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தெலுங்கு ஊடகங்கள் காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது செய்தி வெளியிட்டு வருகின்றன. மேலும் அந்த விழாவிற்கு தெலுங்கு தயாரிப்பாளரான பெல்லங்கொண்டா ஸ்ரீனிவாசஸ் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மணமகனின் பெயர் கௌதம் என்றும் அவர் தொழிலதிபர் என்றும் சொல்லப்படுகிறது. காஜல் அகர்வால் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *