முதல் முறையாக ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்….!!!!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் கோமாளி படத்தில் நடிகர் ஜெயம் ரவி 9 வேடத்தில் நடிக்கிறார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ”கோமாளி”. ஜெயம் ரவியும், காஜல் அகர்வாழும் முதல் முறையாக இணையும் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஜெயம் ரவி 9 வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் மற்றோரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே  நடித்துள்ளார்.

Image result for காஜல் அகர்வால்,ஜெயம் ரவி

மேலும் இது குறித்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறுகையில், ‘‘இது ஜெயம் ரவிக்கு  24-வது படமாகும். இதில் நடிகர் ஜெயம் ரவி ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் உள்பட 9 வேடங்களில் அவர் நடிக்கிறார். இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்,ரவிக்குமாரும், நடிகர் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில நடித்துள்ளனர்.