குழந்தைகள் நலனுக்காக பள்ளிக்கூடம் கட்டி கொடுத்த காஜல் அகர்வால்…!!!

காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் வெளிவரும் நிலையில்  குழந்தைகளுக்காக பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டி கொடுத்துள்ளார்.

காஜல் அகர்வால் நடித்துள்ள படம் ‘பாரிஸ் பாரிஸ்’ இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் மேலும் தெலுங்கு படங்களிலும் நடித்துவருவதாகவும் கூறியுள்ளார். சினிமா வாழ்க்கை பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது.

காஜல் அகர்வால் பாரிஸ் பாரிஸ் க்கான பட முடிவு

என்னை பார்ப்பவர்கள் அனைவரும்  உங்கள் திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். இப்போது என் கவனம் முழுவதும்  நடிப்பில்தான் இருக்கிறது. நேரம் வரும்போது எல்லோருக்கும் தெரிவித்துவிட்டு திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். மேலும் தமிழில் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் படம் வெற்றியை கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

காஜல் அகர்வால் பாரிஸ் பாரிஸ் க்கான பட முடிவு

 

இந்நிலையில் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறேன். அதற்கு என் பணத்தையே செலவிடுகிறேன். இந்நிலையில் ஆந்திராவில் உள்ள அரக்கு என்ற பகுதிக்கு சென்றபோது அங்குள்ள ஆதிவாசி குழந்தைகள்  பள்ளிக்கூடம் இல்லாமல் அவதிப்படுவதை பார்த்தேன். இதனால் நன்கொடை வசூலித்து அரக்கு பகுதியில் பள்ளிக்கூடம் கட்டி கொடுத்துள்ளேன். மற்றவர்ளை பற்றி மோசமாக பேசுவது பற்றியும் அப்படி பேசுபவர்களை ஊக்குவிப்பதும் தவறு. என்று காஜல் அகர்வால் கூறினார்.