நான் தான் விபத்தை ஏற்படுத்தினேன்… காதலனை காப்பாற்ற முயற்சி செய்த பெண்… கணவரிடம் ஒப்படைத்த போலிசார்…!!

ரகசிய காதலனை காப்பாற்ற கார் விபத்தை, தான் ஏற்படுத்தியதாக கூறிய பெண்ணை  கணவரிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

மெக்சிகோவில் கார் ஒன்று சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான நிலையில் இருந்தது. இத்தகவல் தெரிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது, அக்காரினூல் ஒரு பெண் இருப்பதை பார்த்து அவரை மருத்துவ  குழுவினர் உதவியுடன் மீட்டனர். பின்பு அவரை விசாரித்த பொழுது அவர் பெயர் எட்னா என்றும் காரில் தான்  மட்டும்  இருந்ததாகவும் கூறினார் .

இதனுடன் இந்த  விபத்தை தானே செய்ததாகவும்  கூறினார் . மேலும் இது குறித்து  தீவிரமாக விசாரித்த காவல்துறையினர் காரில் வேறு ஒரு நபர் இருப்பதை கண்டறிந்தனர்.  அவர் எட்னாவின் காதலன் என்றும் , அவர் பெயர் ராகுல் என்பதையும் அறிந்துக்கொண்டனர்.  அவரை காப்பாற்றுவதற்காக தானே விபத்தை ஏற்படுத்தியதாக பொய்யான தகவலை  காவல்துறையினரிடம் கூறினார் என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் எட்னாவை வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக அவர்களிடம் மொபைல் நம்பர் வாங்கி காவல்துறையினர் அப்பெண்ணின் வீட்டிற்கு அழைத்தனர், அப்பொழுது அவரது வீட்டில்லிருந்து வந்த நபரை விசாரித்த பொழுது அவர் எட்னாவின் கணவர் என்பது தெரியவந்தது.

இத்தகவலை அறிந்த காவல் துறையினர் எட்னா கணவருக்கு துரோகம் செய்வதாகும் கணவருக்குத் தெரியாமல் ரகசிய காதலனுடன் சுற்றுகிறார் என்ற செய்தியையும் அறிந்து கொண்டனர் . இதனால் காவல்துறையினர் ராகுலை கைது செய்து,  வழக்கிலிருந்து விடுவித்து எட்னாவை வீட்டிற்கு அனுப்பி  வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *