காவிரி-வைகை-குண்டாறை இணைப்பது பற்றி…. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் பரவலான பாசனவசதி பெறும் அடிப்படையில் காவிரி-வைகை-குண்டாறை இணைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை ஆகும். இத்திட்டத்துக்கு சென்ற அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு, 2021-ம் வருடம் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் நதிநீர் இணைப்பு திட்டங்கள் குறித்து மக்களவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

அதாவது, காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கையானது தயாரிக்கப்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த திட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2.83 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.