காதலை உறுதி செய்த பிக்பாஸ் நடிகை?…. வெளியான போட்டோ….. ரசிகர்கள் வாழ்த்து….!!!!!

சத்யா தொடரில் ஆண் போன்ற தோற்றத்தில் போல்டாக ஆயிஷா நடித்திருந்தார். அதோடு பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளராகவும் ஆயிஷா கலந்துகொண்டு பிரபலமானார். இந்நிலையில் நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான நடிகை ஆயிஷா தனது காதலை உறுதி செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் தனது காதலன் முகத்தை காட்டாமல் அவருடன் இருக்கும் புகைப்படத்தை ஆயிஷா பதிவிட்டுள்ளார்.

அதோடு விரைவில் இது குறித்து அறிவிப்பேன் என்றும் ஆயிஷா குறிப்பிட்டுள்ளார். முன்னதாக  யோகேஸ்வரன் என்பவரை ஆயிஷா காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இதனால் அவர்தான் இவராக இருப்பார் என்று ரசிகர்கள் சொல்லி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் ஆயிஷா ஏற்கனவே நெற்றியில் குங்குமம் வைத்தவாறு எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு திருமணம் ஆகிவிட்டதா என அதிர்ச்சி ஆனதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply