‘காடன்’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காடன்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது .

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பிரபு சாலமன் ‘கும்கி’ படத்திற்கு பிறகு யானைகளை வைத்து மிகுந்த பொருட் செலவில் இயக்கியுள்ள படம் ‘காடன்’. நடிகர் ராணா மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகர்களாக நடித்துள்ள இந்த படம் தமிழ் ,இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் உருவாகியுள்ளது . இந்த படத்தில் ஜோயா கதாநாயகியாக நடித்துள்ளார் . இந்தப் படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி ஒலி அமைப்பாளராக பணிபுரிய சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ளார் .

Kaadan is an incredible film and equally incredible role: Rana Daggubati -  Only Kollywood

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காடன்  படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தனர் . ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது . பின்னர் கடந்த அக்டோபர் மாதம் இந்த படத்தை பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தனர் ‌. இந்நிலையில் மீண்டும் இந்த படத்தின் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர் . தற்போது இந்த படம் வருகிற மார்ச் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *