வீட்டிற்கு சென்று உரிமையாளர்கள்…. கடையில் காத்திருந்த அதிர்ச்சி…. குமரியில் பரபரப்பு….!!!

நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை பகுதியில் விஸ்வபம்வரன், ராஜகோபால் இருவரும் நகைக்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல பணி முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்க்கும் போது கடையின் ஷட்டர் திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் கடையின் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. எனவே இருவரும் அருகில் உள்ள நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *