ஓடும் பேருந்தில் பெண்ணின் கையில் வைத்திருந்த நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ராஜீவ் நகரில் கமலா என்பவர் வசித்து வருகின்றார். இவர் வீட்டிலிருந்த நகைகளை பையில் வைத்து எடுத்துக்கொண்டு மதுராந்தகத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் மதுராந்தகத்திலிருந்து பேருந்து மூலம் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது புலிப்பாக்கம் டோல்கேட்டில் 6 வாலிபர்கள் பேருந்து ஏறியுள்ளனர். இதனையடுத்து அந்த வாலிபர்கள் கமலாவிடம் கீழே கிடந்த சில்லரையை எடுத்து கொடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து கமலா தனது கையில் வைத்திருந்த நகையை காணவில்லை என்று தேடி பார்த்துள்ளார். அப்போதுதான் அந்த மர்ம நபர்கள் நகையை திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது. இதுபற்றி கமலா மறைமலை நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.