“எங்களது நகைகளை மீட்டு தரவேண்டும்” 2-வது நாளாக தொடரும் போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!!

வாடிக்கையாளர்களிடம் போலி ரசீது கொடுத்து நகை மதிப்பீட்டாளர்கள் ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் மங்களூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சுற்றியுள்ள 25 கிராமங்களை சேர்ந்தவர்கள் வாடிக்கையாளராக உள்ளனர். இங்கு நகை கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை மீட்டு பணம் செலுத்தவும், புதுப்பிக்கவும் சென்றுள்ளனர். அப்போது வங்கியில் பணியில் இருக்கும் 2 நகை மதிப்பீட்டாளர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு ரசீதை வழங்கி பின்னர் நகைகளை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

இதைப்போல் பல நாட்களாக தொடர்ந்து நடந்து வந்ததால் சந்தேகமடைந்த வாடிக்கையாளர்கள் வங்கி மேலாளரிடம் முறையிட்டனர். அதில் போலி ரசீதுகளை வழங்கியது தெரிய வந்தது. அதுமட்டுமல்லாது பணத்தை வரவு வைக்காமல் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்ததால் கோபமடைந்த வாடிக்கையாளர்கள் ஒன்று சேர்ந்துவங்கியை முற்றுகையிட்டனர்.

மேலும் 2-வது நாளாக வங்கியை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு நகைகளை திருப்பி தருமாறு கோஷமிட்டனர். இதுபற்றி தகவலறிந்த சிறுபாக்கம் காவல்துறையினர், வங்கி அதிகாரிகள் நேரில் வந்து மதிப்பீட்டாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து வாடிக்கையாளர்கள் நகை கடன் பெற்றவர்களிடம் இருந்து ரூபாய் 1 கோடிக்கு மேல் கையாடல் செய்து இருப்பதாகவும், இது தொடர்பாக மதிப்பீட்டாளர்களிடம் உரிய விசாரணை நடத்தி பணம் மற்றும் நகையை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *