“யாரும் கண்டுபிடிச்சிட கூடாது” மிளகாய் பொடி தூவி சென்ற கொள்ளையர்கள்…. வேலூரில் பரபரப்பு….!!!

தொழிலாளி வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு திரு.வி.க நகரில் சாந்தி என்பவர் வசித்து வருகின்றார். இவரது வீட்டில் ஆனந்த் பாபு என்பவர் வாடகைக்கு வசித்து வருகின்றார். இந்நிலையில் ஆனந்த் பாபு அருகிலுள்ள கிராமத்திற்கு தனது பாட்டியை பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது அவர் வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதாக உரிமையாளர் சாந்தி செல்போன் மூலம் அவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்த் பாபு வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். அதுமட்டுமல்லாது தடயம் ஏதும் தெரியாமல் இருக்க மிளகாய் பொடியை தூவி உள்ளனர். எனவே ஆனந்த்பாபு இதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *