JUSTIN:  CSK பாராட்டு விழா…  சென்னை வந்தடைந்தார் எம்.எஸ்.தோனி…!!!

இன்று மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும், தோனி தமிழ்நாடு வந்து ஐபிஎல் கோப்பையை முதல்வரிடம் வழங்குவார் என்று தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான விழா சென்னையில் நடைபெறும் எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழை சீனிவாசன் அவரிடம் வழங்கினார். அதன்படி இன்று மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் வெற்றி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக எம்எஸ் தோனி சென்னை வந்தடைந்துள்ளார்.