டெல்லியில் இருந்து உத்தரகாண்ட்டுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தன்னுடைய  காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஹரித்வார் மாவட்டம் ரூர்க்கி அருகே திடீரென ரிஷப் பண்டின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ரிஷப் பண்டின் கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ரிஷப் பண்டுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இவர் டோராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சைக்காக டெல்லிக்கு தனி விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இந்த தகவலை டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ஷியாம் சர்மா தெரிவித்துள்ளார்.