JUSTIN: மொத்தம் 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என கூறியுள்ளது. இதனால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்களின் நலன் கருதி பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், தென்காசி, பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையும், திருவாரூர், மதுரை, ராமநாதபுரம், அரியலூர், சிவகங்கை, தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *