Justin: பிப். 18-ல் மதுரைக்கு வருகிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு….!!!

இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவி ஏற்ற நிலையில் முதல் முறையாக தமிழகம் வருகிறார். இவர் பிப்ரவரி 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்களில் இரு நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வர இருக்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம் செய்து விட்டு அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மேலும் இதைத் தொடர்ந்து கோவையில் உள்ள ஈசா யோகா மையத்தில் நடக்கும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொள்ள இருக்கிறார்.