JUSTIN: பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை…. அரசு அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர்.

தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி,  தமிழகத்தில் 24 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். மேலும் திருவள்ளூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கன மழையால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் தொடர்ந்து இன்று கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *