JUSTIN : சான்றிதழ் கொடுத்தா தான் பாட்டில்….. அரசு போட்ட உத்தரவு…. குடிமகன்களுக்கு ஷாக்…!!!!

நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி  போடும்  பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர். இதற்கிடையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது.

எனவே அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், பொதுமக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும்  விதமாக தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து வருகின்றனர். அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு, தியேட்டர்களுக்கு, மால்களுக்கு செல்ல முடியாது என்று தெரிவித்திருந்தது. மேலும் தற்போது தடுப்பூசி காண சான்றிதழை சரிபார்த்த பிறகே மது விற்பனை செய்யப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் குடிமகன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *