JUSTIN : ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது…. கமல்ஹாசனிடம் விளக்கம்…. சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி…!!!!

கொரோனா உறுதி செய்யப்பட்ட ஏழு நாட்களுக்குப் பிறகு தனிமைப்படுத்தலில் ஈடுபடாமல் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பாக கமல்ஹாசனிடம் கேள்வி கேட்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசன் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.தொடர்ந்

து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிஸ்சார்ஜ் ஆகிய முதல் நாளை பொது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படும். தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு பின் பிறகு அந்த நபர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்துதல் இருக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை. அதனை மீறி அவர் செயல்பட்டதற்கு சரியான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *