சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒப்பந்த செவிலியர்களை போராடுவதற்கு சிலர் தூண்டுகிறார்கள் என்று கூறினார்.
அதன் பிறகு அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தான் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டார்கள்.

எனவே எதற்காக போராடுகிறோம் என்ற காரணத்தை உணர்ந்து செவிலியர்கள் போராட்டம் நடத்த வேண்டும். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. மேலும் ஒப்பந்த செவிலியர்களுக்கு மாவட்ட வாரியாக பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.