தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் அனைத்தும் நடைபெறும் என்று அறிவித்துள்ள நிலையில், ஜனவரி 14-ஆம் தேதி அவனியாபுரம் பகுதியிலும், ஜனவரி 15-ஆம் தேதி பாலமேடு பகுதியிலும், ஜனவரி 17-ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று அரசு அறிவித்தது.

இந்நிலையில் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜனவரி 17-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில், வாடி வாசலில் வர்ணம் தீட்டுவது, கேலரி அமைப்பது போன்ற பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு இன்று கால்கோள் நடும் விழா நடைபெற்றது. மேலும் இந்த விழா வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.