ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத் நோக்கி கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்த போது திடீரென தடம் புரண்டது. ஆனால் உடனடியாக ஓட்டுனர் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக ரயிலில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். மேலும் கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்துக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.