ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. இவர் தெலுங்கு தேச கட்சியின் தலைவர். இவருடைய வீட்டில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கட்சி சார்பில் பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டது. அப்போது புடவை வாங்குவதற்காக சென்ற 3 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கடந்த வாரம் சந்திரபாபு நாயுடுவின் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சோகம் நீங்குவதற்குள் மீண்டும் சந்திரபாபு நாயுடுவின் வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் சிக்கி 3 பேர் உயரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.