பெண்மருத்துவர் வன்புணர்வுக்கு நடிகர் சல்மான் கான் இரங்கல்..!!

ஹைதராபாத்தில் பெண்மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

திரையுலக பிரபலங்கள் பலரும் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் குறித்து தங்களது கருத்தை பதிவு செய்து வரும் நிலையில், நடிகர் சல்மான் கானும் தனது எதிர்ப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில், ‘மனித உருவில் இருக்கும் மிகமோசமான தீமை இது’ என்று பதிவிட்ட சல்மான், ‘நிர்பயா, பிரியங்கா ரெட்டி போன்ற பெண்களின் இந்த வலியும், துன்பமும், மரணமும் நம் அனைவரையும் ஒன்றிணைத்து அடுத்து எந்த பெண்ணும் பாதிக்கப்படும் முன்னர் இந்த சாத்தான்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

Image result for salman khan priyanka reddy

இந்த இழப்புக்கும், பாதிப்புக்கும் ஒரு முடிவு கொண்டுவர வேண்டும். பெண்களை பாதுக்காப்போம் என்பது வெறும் பிரச்சாரமாக மட்டும் இருக்கக்கூடாது. இந்த சாத்தான்களுக்கு நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை புரியவைக்கவேண்டும். பிரியங்காவின் ஆன்மா அமைதியில் உறங்கட்டும்’ என பதிவிட்டிருந்தார். தற்போது சல்மான் கானைப் போல் பல திரையுலக பிரபலங்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *