கொரோனா தாக்கம் : சட்டசபை ஒத்திவைப்பு ? மதியம் 1 மணிக்கு முக்கிய முடிவு …!!

கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. 

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கிய இந்த வைரஸ் தாக்கத்தால் தமிழகத்திலும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்கள் , கோவில்கள் , பெரிய பெரிய மால்கள் , திரையரங்கம் என பலவற்றை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் மக்கள் எல்லாரும் கூட கூடாது என்று கூறிவிட்டு நாம் சட்டமன்றத்தில் கூடி இருப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே சட்டமன்றத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று முக.ஸ்டாலின் தெரிவித்தார். இதையடுத்து சபாநாயகர் தலைமையில் ஒரு மணிக்கு அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று அவையை தொடர்ந்து நடந்ததலாமா ? என்பது குறித்து முடிவு எடுக்கப்பட இருக்கின்றது.