பாஜகவில் இருந்து விலகிய மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன் அதிமுகவில் இணைந்துள்ளார். பி.டி.ஆர் மீது செருப்பு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து, பாஜகவில் இருந்து விலகிய அவர் திமுகவுடன் மிக நெருக்கமாக இருந்தார். இதையடுத்து அவர் திமுகவில் ஐக்கியமாவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துள்ளார். அவருக்கு மதுரை மாவட்ட தலைவர் பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது.