சென்னையில் திருட்டு வாகனங்களை கண்டறியும் வகையில் அதிநவீன ANPR( AUTOMATIC NUMBERPLATE RECOGNITION)கேமராக்களை பயன்படுத்த சென்னை மாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது. இதன் முதற்கட்டமாக 50 இடங்களில் 200 கேமராக்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருட்டு வாகனங்களின் எண்ணானது கேமராவில் பதிவானதும் காவல்துறைக்கு தகவல் செல்லும் விதமாக புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.