பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் அருகே திருச்சி மற்றும் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுங்காயங்களுடன் 30 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சிலரின் உடல்நிலை மோசமாக இருப்பதால் வலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. சுமார் இரண்டு மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.